பொருள் சேர்த்தோர் மென்மேலும் பொருள்பெருக்கும் வழி யாய் பொருள் படைக்கும் பொறியமைத்து வேலைதனைக் குறைத்தார் பொருளுக்கு விலையேது? உழைப்போரால் வாழ்வு பொருளாசை இயற்கையினைச் சுரண்டுகின்ற வழியே பொருள்கொண்டோர் வாழ்வுதனைப் பொருட்டாக நினைத்து போகவாழ்வில் மயங்கிநின்று பொறுப்பற்ற வாழ்க்கை அருள்வழியில் நிறைவுண்டாம் அமைதியுண்டாம் அறிக அளவான பொருள்துய்ப் போம் அற வழியில் வாழ்வோம்